Sunday, July 3, 2022

கூண்டில் கிளி

 உயர உயர பறந்த காட்டு கிளி ஒன்று, காற்றின் அலையோசை உடன் நடனமாடி வந்தது.  கடும் கோடைகால நாளொன்றில், நிழலும் நீரும் அளித்த அருளாளன் ஒருவன் மீது அன்பு கொண்டது.  தன்னிலை மறந்து அவனது தங்கக் கூண்டில் அடிமைப்பட்டது.  அவன் இன்று விடுவிப்பான், நாளை விடுவிப்பான் என்று நம்பி மனம்  நொந்தது, பேச்சை இழந்தது, பறக்க மறந்தது.  


பின்பு ஒருநாள் கூண்டை விட்டு வெளியேற்றி,  அதன் சிறகுகளை கிழித்து எறிந்தான்.  கிளி கதறியது, வேண்டியது, சபித்தது. "நன்றிகெட்ட முட்டாள் கிளியே! உன்னால் பார் என் கைகளில் மொத்தம் ரத்தம்" என்றான்.  கிழிந்த சிறகுகளை  தாங்கிக் கொண்டு மெல்ல  கூண்டிற்குள் சென்று ஒளிந்தது.

No comments:

Post a Comment