நதிக்கரையில் பாலகன் ஒருவன்,
விளையாட்டாய் ஆற்று நீரை வாணத்தை நோக்கி எறிந்தான்
நீர் துளிகள் ஒன்றை மிஞ்சி ஒன்று உயர உயர பறந்தன
சிலவை வேகமாக சிலவை நிதானமாக
சிலவை துணையை தேட, மற்றவை தனியே ஓட
காலம் தவறியதும் அவ்வனைத்தும் வீழ்ந்து நதியில் சேர்ந்தன
ஓர் துளி மட்டும் கலத்தை கடந்து விண்ணில் பிரகாசித்தது
ஐந்து நிமிட பாலகனின் லீலையில்
எது எனது, எது உனது?
யார் என்னவர், யார் மற்றவர்?
யார் மேலோர், யார் தாழ்ந்தோர்?
அவ்வொரு துளியை கேட்க
புன்னகித்து காற்றில் கரைந்தது .

No comments:
Post a Comment